tamilnadu

வால்வுகள் குறித்த நேரடி  செயல்விளக்க மையம் திறப்பு

 சென்னை, அக். 26- பல்வேறு வகையிலான வால்வுகள் குறித்த நேரடி செயல்  விளக்க மையம் சென்னையின் அடையாளங்களில் ஒன்றான  ஸ்பென்சர் மாலில் திறக்கப்பட்டுள்ளது. அனுபவம், நிபுணத்துவம் மற்றும் புதுமையான தயா ரிப்புகளுக்கான உள்கட்டமைப்பு துறையில் நன்கு அறி யப்பட்ட நிறுவனமான லெஹ்ரி வால்வ்ஸ் வாடிக்கை யாளர்களுடன் கலந்துரையாடவும் பல்வேறு வகையிலான வால்வுகள் பயன்பாடு அதன் செயல்பாடு குறித்து நேரடி யாக விளக்கவும் இதனை திறந்துள்ளது.  இன்றைய உள்கட்டமைப்பில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் மற்றும் தண்ணீர் நுகர்வுக்கான வளர்ந்து வரும்  தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தங்களது  அனு பவ மையம் திகழும் என்று லெஹ்ரி வால்வுகள் நிறுவனம் கூறியுள்ளது. முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு சிறந்த  தொழில்நுட்பத்தில் தண்ணீர் விநியோகமுறை தேவைப்படு கிறது.  இதுகுறித்த விழிப்புணர்வை   பொதுமக்களிடம் பரப்பு வதே இதுபோன்ற ஸ்டூடியோக்கள் திறக்கப்படுவதன் முக்கிய  நோக்கம் என்று அந்த நிறுவனத்தின் செய்திக்குறிப்பு தெரி விக்கிறது. இந்த  அனுபவ ஸ்டுடியோவில் அமேசானின் அலெக்சா  உதவியுடன் கேள்விகளுக்கு பதிலளிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது.