tamilnadu

img

மாற்றுத்திறனாளி ஊழியர்கள் மீது போக்குவரத்து அதிகாரிகள் பாரபட்சம் நடவடிக்கை எடுப்பதாக முதன்மைச் செயலாளர் வாக்குறுதி

சென்னை, ஜூன் 19- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன் தலைமையில் மாநில துணைத்தலைவர் பி.எஸ். பாரதி அண்ணா, மாநிலச் செயலாளர் பி.ஜீவா, மாநில துணைச் செயலாளர் எஸ்.கே.  மாரியப்பன் ஆகியோர் அடங்கிய குழு தலைமைச் செயலகத்தில் போக்கு வரத்துத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணனை சந்தித்தது. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் 150 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி பணியா ளர்களை ஊனமுற்றோர் உரிமை களுக்கான சட்டம் மற்றும் தொழி லாளர் நலச்சட்டங்களுக்கு எதிராக மனிதாபிமானமற்ற முறையில் பாரபட்சத்துடன் நடத்தப்படுவதை ஆதாரங்களுடன் மனு அளித்து முறையிட்டது.  தமிழக அரசின் 2007  ஆம் ஆண்டு நிதித்துறை அரசாணை  (307)படி மாதாந்திர போக்குவரத்துப்படி ரூ.2500 பெரும்பாலான மாற்றுத்திற னாளி ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை.
அருகாமையில் பணிவழங்க மறுப்பு 
 பணிமனைக்குள் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு மட்டும் மாதாந்திர கலெக்ஷன் பேட்டா வழங்கப்படுவதில்லை.  சட்டம் மற்றும் தமிழக அரசின் தலைமை செயலாளர் உத்தரவு இருந்தும் இருப்பிடத்திற்கு அருகாமையில் மாற்றுத்திறனாளி ஊழியருக்கு பணி வழங்க மறுக்கப்படுகிறது. தமிழக அரசின் 2008 ஆம் ஆண்டு சமூகநலத்துறை அரசாணை(151) - ன் படி 2 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிக ஊழியராக, தொகுப்பூதிய ஊழியராக பணியாற்றும் மாற்றுத்திறனாளிகள் இருந்தால், அவர்களை நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியத்தின்கீழ் கொண்டுவரவேண்டும்
கோரிக்கைகள்
சென்னை மாநகரப் போக்கு வரத்துக் கழகத்தில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்கள் துயரங்களை களைவதற்கும், சட்டப்படி யான உரிமைகளை வழங்குவதற்கும் போக்குவரத்துத்துறை செயலாளர் ஒரு சிறப்பு குறை கேட்பு கூட்டத்தை உடன் நடத்தி, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  சட்டப்படியான பாதுகாப்பை அனைத்து அரசுப் போக்குவரத்துக்கழக மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கும் உறுதிப்படுத்த உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கோருகிறோம். சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக பொறுமையாக ஒவ்வொரு பிரச்சனை யையும் கேட்டறிந்த அவர், பிரச்சனை களைத் தீர்க்க மிக விரைவில் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததாக சங்கத்தின் மாநிலத்தலை வர் ஜான்சிராணி,. பொதுச் செயலாளர் நம்புராஜன் ஆகியோர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும்போது விபத்து உள்ளிட்ட காரணங்களால் மாற்றுத்திறனாளிகளாக மாறி அதிகாரி களால் கொடுமைகளை சந்தித்து வரும் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் முதன்மைச் செயலரிடம் தனித்தனியாக மனுக்களை அளித்தனர். 

;