திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ரூ. 64.3 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதி, ரூ. 2.82 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள் வசதிக்காக காத்திருப்பு கூடம், ரூ. 1.17 கோடி செலவில் சொற்பொழிவு அரங்கம் என அனைத்தையும் காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் வெள்ளிக்கிழமை (ஆக.22) மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்,து திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் குத்துவிளக்கு ஏற்றி அடிக்கல் நாட்டு விழாவை துவக்கி வைத்தார். எ.வ.வே.கம்பன், மக்களவை உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, ஸ்ரீதரன், கார்த்திக் வேல்மாறன் மற்றும் அரசு அதிகாரிகள் இருந்தனர்.