tamilnadu

மெட்ரோ ரயிலில் மாணவர்கள் கல்விப் பயணம்

சென்னை,நவ.21- மெட்ரோ ரயிலைப் பற்றியும் அதில் உள்ள வசதி கள் மற்றும் தொழில்நுட்ப ங்கள் குறித்தும் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிக ளின் மாணவ-மாணவியர்க ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில்  மெட்ரோ ரயில் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. சென்ட்ரல் மெட்ரோவில் இருந்து கோயம்பேடு வழியாக விமானநிலையம், பரங்கிமலை மற்றும் வண்ணாரப்பேட்டையில் இருந்து ஏ.ஜி.டி.எம்.எஸ் வழியாக விமான நிலையம் வரை மெட்ரோ ரயிலில் கல்விப்பயணம் ஏற்பாடு செய்து அழைத்துச் செல்லப்படுகின்றனர். கல்விப் பயணங்கள் மாதந்தோறும் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது. மெட்ரோ ரெயிலின் சிறப்பு அம்சங்களை பற்றி மாண வர்களுக்கு விளக்கப்பட்டு வருகிறது. கடந்த 2018-19 ஆம் கல்வி ஆண்டில் மொத்தம் 31,178 மாண வர்கள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான கல்விப் பயணம் கடந்த ஜூன் 4 ஆம் தேதி முதல் தொடங்கியது. செப்டம்பர் மற்றும் அக்டோ பர் மாதத்தில் மொத்தம் 6,641 மாணவர்கள் இந்த கல்விப் பயணத்தை மேற்கொண்டனர். கடந்த ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மொத்தம் 20,195 மாண வர்கள் பயணம் செய்துள்ள னர்.

;