tamilnadu

பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் பெருந்திரள் முறையீடு

பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் பெருந்திரள் முறையீடு

வேலூர், ஜூலை 20 - நீதிமன்ற உத்தரவின் படி எம்ஆர்பி தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி  தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் வேலூர் மாவட்டம் சார்பில் பெருந்திரள் முறையீடு இயக்கம் மாவட்ட தலைவர் சு.லாவண்யா தலைமையில் நடைபெற்றது. திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல் அனைத்து தொகுப்பு புதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கை க்கு ஏற்ப  தேசிய மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய பொது சுகாதார தர நிர்ணயங்கள் பரிந்துரைகளின் அடிப்படையில் நிரந்தர செவிலியர் பணியிடங்கள் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டது.  கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாவட்டப் பொருளாளர் சுகுமாரி துவக்கி வைக்க, தமிழக தமிழாசிரியர் வா.ரா நிறைவு செய்து பேசினார். முன்னதாக மாவட்டப் பொருளாளர் பூங்குழலி முன்னனிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் இனியா கோரிக்கை விளக்க உரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் டி.டி.ஜோஷி, மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.தீனதயாளன், முன்னாள் மாவட்டத் தலைவர் அ.சேகர்  ஆகியோர் பேசினர். துணைத்தலைவர் லதா நன்றி கூறினார்.