சென்னை.மே.16- சென்னையை அடுத்த திருவள்ளுர் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் எல் அண்ட் டி கப்பல் கட்டும் தொழிற்சாலை யில் ஆயிரத்திற்கு மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் ஒப்பந்த கூலிகளாக பணி புரிந்து வருகின்றனர். ஊர டங்கால் சொந்த ஊர் செல்ல விருப்பம் தெரிவித்த தொழி லாளர்களை நிர்வாகம் காட்டாயப்படுத்தி வைத்துள் ளது. ஏப்ரல் மாத சம்பளத்தை வழங்காமல் உள்ளது. மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் நிர்வா கத்திற்கு ஆதரவாக இருக்க, மே 7ஆம் தேதி இரவு முதல் தொழிலாளர்கள் வேலை செய்ய மறுத்து வந்தனர்.
இந்நிலையில் சுமார் 300 உத்தரப்பிரதேச மாநில தொழிலாளர்கள் காட்டுப் பள்ளியில் இருந்து சென்ட் ரல் ரயில் நிலையத்திற்கு எண்ணூர் வழியாக நடந்து வந்தனர். இதனால் ஆத்திரமுற்ற காவல்துறையினர், எண்ணூர் கத்திவாக்கம் நகராட்சி அருகே வந்த தொழி லாளர்கள் மீது சரமாரியாக தடியடி நடத்தியுள்ளனர். அதனையும் மீறி காயங்களு டன் ரயில் நிலையத்தை நோக்கி தொழிலாளர்கள் சென்றனர்.