சென்னை, ஆக. 26 - வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த யாரு க்கும் குரங்கு அம்மை அறிகுறி கள் இல்லை என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல் வவிநாயகம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: வெளிநாடுகளிலிருந்து தமிழக விமான நிலையங் களுக்கு வருபவர்களை கண் காணிக்கும் பணி தொடங்கி யுள்ளது.
அதன்படி, சர்வதேச விமா னங்களில் பயணித்து வருபவ ர்களின் உடல் வெப்பத்தை பரி சோதிக்கும் அமைப்பு ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இது கொரோனா காலங்களிலிருந்து பயன்பாட்டில் இருந்து வரு கிறது. இந்த பரிசோதனை களில் பயணிகளுக்கு காய்ச்சல் இல்லை எனில் பச்சை நிறத்தி லும், காய்ச்சல் இருந்தால் சிவப்பு நிறத்திலும் விளக்கு எரிந்து எச்சரிக்கை ஒலிஎழுப்பும். முழுநேரமும் பணியில் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் நோயா ளிகளை அடையாளம் கண்டு விமான நிலையத்திலேயே, அவர்களை தனிமைப்படுத்தும் அறையில் தங்க வைத்து முதலுதவிகளை செய்வார்கள்.
தேவைப்பட்டால் உயர் சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அனுப்புவார்கள். அந்த வகையில் தமிழகத்தில் இதுவரை ஒரு வருக்கு கூட குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட வில்லை. அதேபோல் வெளி நாடுகளில் இருந்து வந்த எவருக்கும் அத்தகைய அறி குறிகள் காணப்படவில்லை. ஆனால், கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.