tamilnadu

img

வெள்ள பாதிப்பு: தமிழ்நாட்டை கைவிட்ட ஒன்றிய அரசு!

தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது என ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலட்சியமாக பதில் அளித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அடுத்த ஒரு வார இடைவேலியில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் கன மழை பெய்தது. இந்த கனமழையால் தென் மாவட்டங்கள் கடுமையாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் வரலாறு காணாத வகையில் இரு முறை ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் எனவும், இழப்பீடுகளை சரி செய்ய தற்காலிக நிவாரணத் தொகையாக 7033 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத் தொகையாக 12,659 கோடி ரூபாயும் வழங்கிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில், தில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது என ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலட்சியமாக பதில் அளித்துள்ளார். 
மேலும், இந்த ஆண்டு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய பேரிடர் நிதி ரூ.900 கோடியை ஒன்றிய அரசு முன்கூட்டியே வழங்கிவிட்டதாகவும், ரூ.900 கோடி தவணையில் இருந்து முதல் தவணையாக ஏப்ரல் மாதம் ரூ.450 கோடியும், இரண்டாவது தவணையாக டிசம்பர் 12ஆம் தேதி ரூ. 450 கோடியும் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
நிர்மலா சீதாராமன் மாநில பேரிடர் நிவாரண நிதி (SDRF) பற்றி மட்டுமே பேசியுள்ளாரே தவிர, தேசிய பேரிடர் நிவாரண நிதி (NDRF) பற்றி பேசவில்லை. அதுகுறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த அதிகாரியை பதிலளிக்குமாறு கைகாட்டி விட்டு நிர்மலா சீதாராமன் நழுவி விட்டார். அதுபற்றி பதிலளித்த அந்த அதிகாரி, தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு ஏராளமான நடைமுறைகள் இருப்பதாக கூறி மழுப்பல் பதிலை அளித்துள்ளார்.
 

;