காஞ்சிபுரம்: 26 பேருக்கு தொற்று
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 26 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 650 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 386 பேர் குணமடைந்துள்ளனர். சுமார் 10 பேர் உயிரிழந்து உள்ளனர். 250 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர்: 92 பேருக்கு தொற்று
திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 92 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1752ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 830 பேர் குணமடைந்துள்ளனர். 17 பேர் உயிரிழந்தனர். 905 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செங்கல்பட்டு: 128 பேருக்கு தொற்று
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 128 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2569ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1142 பேர் குணமடைந்த நிலையில், 22 பேர் இறந்தனர். 1404 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
42 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா
சென்னை மருத்துவக் கல்லூரி ஆடவர் விடுதியில் முதுகலை மாணவர்கள் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 58 மாணவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் 42 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.