தமிழகத்தில் படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி பேருந்தகளுக்கு புதிதாக வரி விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் இன்று படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு புதிதாக வரி விதிக்கும் மசோதாவை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார். இதன்படி ஆம்னி பேருந்துகளுக்கு இனி ஒரு இருக்கைக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரமும், படுக்கை வசதியுடன் கூடிய இருக்கைக்கு ரூ.2,500 என வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை வரிவிதிப்பு இல்லாத நிலையில் தற்போது படுக்கை வசதியுடைய ஆம்னி பேருந்துகளுக்கு புதியதாக வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர வாய்ப்புள்ளது.