tamilnadu

img

கடலூர் துறைமுகத்திலிருந்து தாம்பரத்திற்கு புதிதாக பயணிகள் ரயில்

கடலூர் துறைமுகத்திலிருந்து  தாம்பரத்திற்கு புதிதாக பயணிகள் ரயில்

அனைத்து கட்சி மறியல் போராட்டம் ஒத்திவைப்பு

கடலூர், செப்.10- கடலூர் துறைமுகத்திலிருந்து தாம்பரத்திற்கு புதிதாக பயணி கள் ரயில் இயக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை நிறைவேற்றுவதாக ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து ரயில் மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. விழுப்புரம்-தஞ்சாவூர் ரயில் பாதையை இரட்டை பாதை யாக அமைக்க வேண்டும், திருப்பா திரிப்புலியூர் ரயில் நிலையத்திற்கு, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையம் என பெயர் சூட்ட வேண்டும்,கம்பியம்பேட்டை மற்றும் சுத்துக்குளம் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். மயிலாடுதுறை-  கோவை விரைவு ரயில், விழுப்புரம் தாம்பரம் பயணிகள் ரயிலை கடலூர் துறை முகம் வரை நீட்டிக்க வேண்டும். மன்னார்குடி - பாமணி மற்றும் உழவன், காரைக்கால், ராமேஸ்வரம் இரவு நேர ரயில்களை திருப்பா திரிப்புலியூர்  ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். திருப்பாப்புலியூர் ரயில் நிலை யத்தில் நடைபெறும் அம்ரித் பாரத் திட்ட பணிகளை விரைந்து நிறை வேற்ற வேண்டும். குள்ளஞ்சாவடி ரயில்வே நிலையத்தை மீண்டும் இயக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம்  தலைமையில் அனைத்து கட்சி, பொது நல அமைப்புகள், குடி யிருப்போர் சங்கத்தின் சார்பாக செப்.15 அன்று ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டி ருந்தது. இந்த நிலையில், கடலூர் கோட்டாட்சியர் சுந்தரராஜன் தலை மையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உதவி கோட்ட இயக்கவியல் மேலாளர்  மதன்ராஜ், ரயில்வே துறை அதி காரிகள் பிரபாகரன், வாசுதேவன், வட்டாட்சியர் மகேஷ், மற்றும் ரயில்வே காவல்துறையினர், கடலூர் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அனைத்துக் கட்சிகளின் சார்பில் சிபிஎம்  மாவட்டச் செய லாளர் கோ.மாதவன், மாநகர செய லாளர் ஆர்.அமர்நாத், காங்கி ரஸ் மாவட்டத் தலைவர் திலகர், மாநிலத் துணைத் தலை வர் ஏ.எஸ்.சந்திரசேகரன், கார்த்தி கேயன், சிவிக மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், மதிமுக மாவட்டச் செயலாளர் எம்.ராம லிங்கம், சிபிஐ  வட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் நாகராஜ், மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயலாளர் மூர்த்தி, ஐஎம்எல்யூ மாவட்டத் தலைவர் இஸ்மாயில், மமக நகர செயலாளர் ஷாஜகான், மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலாளர் பாலு, ரவிச்சந்திரன், குடியிருப்போர் சங்க சிறப்புத் தலைவர் எம்.மருதவாணன், பொதுச் செயலாளர் பி. வெங்கடேசன், ரயில் பயணிகள் சங்கம் விஜயகுமார், தமிழ்நாடு மீனவர் பேரவை மாவட்ட தலைவர் சுப்பராயன்  உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தை முடிவில், கடலூர் துறைமுகத்திலிருந்து தாம்பரத்திற்கு புதிய பயணிகள் ரயில் மற்றும் புதுவையில் இருந்து வேளாங்கண்ணிக்கு தினசரி ரயில் இயக்கவும், கட லூர் துறைமுகத்தில் இருந்து திரு வண்ணாமலை பெங்களூர் வழி யாக ஹூப்ளிக்கு புதிய ரயில்  இயக்கு வதற்கு ரயில்வே போர்டுக்கு பரிந்துரை செய்வதாக உறுதி யளித்தனர். கடலூர்-பாண்டி இருப்புப் பாதை ஆய்வுப் பணிகள் நடை பெற்று வருவதாகவும்,  திருப்பா திரிப்புலியூர் ரயில் நிலைய பணிகளை வேகப்படுத்த புதிய ஏலம் விட்டு 6 மாதத்தில் முடிக்க ஏற்பாடு செய்யப்படும் என தெரி வித்தனர். கோட்டாட்சியர்  திருப்பா திரிப்புலியூர் ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம் சம்பந்தமான நட வடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன் அடிப்படையில் செப்.15 நடைபெறவாக இருந்த ரயில் மறியல் போராட்டம் தள்ளி வைக்கப்படும் என அனைத்து கட்சியின் சார்பாக உறுதி அளிக்கப்பட்டது.