புதிய கிளாசிக் பிரஷர் குக்கர் பெர்க்னர் இந்தியா அறிமுகம்
சென்னை,ஜூலை 16- உயர்தர சமையல் சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெர்க்னர் இந்தியா புதிதாக ஆர்ஜென்ட் கிளாசிக் பிரஷர் குக்கரை அறிமுகம் செய்துள்ளது. சென்னையில் இதனை அறிமுகம் செய்து வைத்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் உமேஷ்குப்தா, 3.5 லிட்டர் மற்றும் 5 லிட்டர் பிரஷர் பேன்கள் இதில் இடம் பெறும் என்றார், வசதியான பிடிப்பை கொண்ட கைப்பிடி, இரட்டை பாதுகாப்பு அம்சங்கள், மென்மையான அவுடர் லிட் லாக்கிங், இண்டக்ஷன்அடுப்புகளுக்கு ஏற்ப வடிவமைப்பு உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்கள் என்று அவர் கூறினார். முன்னதாக புதிய தயாரிப்புகளை சென்னை திநகர் ரத்னா ஸ்டோர் நிர்வாக பங்குதாரர் அமுதா கணேஷ் அறிமுகம் செய்து வைத்தார். மேலாண் இயக்குநர் கணேஷ், பெர்க்னர் நிறுவன தென்னிந்திய வர்த்தக தலைவர் முனிராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.