tamilnadu

img

சென்னை முக்கிய செய்திகள்

கைத்தறி நெசவாளர்களுக்கு  தேசிய அடையாள அட்டை

திருவண்ணாமலை, ஆக. 10- திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் கைத்தறி நெசவாளர்களுக்கு பேச்சான் கார்டு  எனப்படும் தேசிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய கைத்தறி நெசவாளர் தினத்தை முன்னிட்டு,  ஆரணி நகரில் திருவண்ணாமலை மாவட்ட பட்டு கைத்தறி நெசவாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு  தேசிய கைத்தறி நெசவாளர் அடையாள அட்டை வழங்கும்  கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்தில் சிஐடியு சங்கத்தின் தலைவர் இளங்கோ தலைமையில், பொதுச் செயலாளர்  எம்.வீரபத்திரன்,பொருளாளர்  குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மூத்த நிர்வாகி  அப்பாசாமி, மாற்றுத்திறனாளி சங்கத்தின் மாவட்டத் தலைவர்  ரமேஷ் பாபு, ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம், வாழப்பந்தல் பகுதி நிர்வாகி கிட்டு மற்றும் மூத்த நிர்வாகிகளும், சங்கத்தின் செயற்குழு உறுப்பி னர்களும் கலந்து கொண்டனர். விழாவில் ஆரணியை சுற்றியுள்ள சேவூர், பையூர், முள்ளிப்பட்டு, கீழ்ப்பட்டு, வடமாதிமங்கலம், சைதாப்பேட்டை மற்றும் பல கிராமங்களில் இருந்து சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். மதுபான பாரில்  இளைஞர் கொலை புதுச்சேரி, ஆக. 10– புதுச்சேரியில் தனியார் மதுபான பாரில் நடந்த மோதலில் தமிழக இளைஞரை பவுன்சர் கத்தியால் குத்திக் கொலை செய்தார். புதுச்சேரி மிஷின் வீதியில் தனியாருக்குச் சொந்தமான ரெஸ்டோ பாரில் தமிழக இளைஞர் சண்முக பிரியன் மற்றும் அவரது நண்பர்கள் நள்ளிரவு மது அருந்திக் கொண்டி ருந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த பவுன்சர்க ளுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பவுன்சர் ஒருவர் கத்தி யால் குத்தியதில் சண்முக பிரியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவரது நண்பர் மேலூரை சேர்ந்த ஷாஜன் காயமடைந்ததார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பவுன்சரை கைது செய்தனர். மேலும் படுகாயம் அடைந்த ஷாஜனை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பாரில் மது அருந்தியபோது பெண் ஒருவரோடு ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடைபெற்றது தெரிய வந்துள்ளது.