சென்னை,மார்ச் 5- தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் சென்னை ராஜா அண்ணா மலைபுரத்தில் டி.என். ராஜ ரத்தினம் கலை அரங்கம் முத்தமிழ்ப் பேரவையில் புதனன்று (மார்ச் 6 வழங்கப் படுகிறது.
2015 ஆம் ஆண்டிற்காக தேர்வு செய்யப்பட்டி ருக்கும்தனி ஒருவன் திரைப்படத்திற்கு முதல் பரிசும், பசங்க-2இரண் டாம் பரிசும் பிரபா படத் திற்கு மூன்றாவது பரிசும் வழங்கப்படுகிறது. சிறந்த திரைப்படத்திற்கான சிறப்பு பரிசு இறுதிச்சுற்று, பெண்களைப் பற்றி உயர் வாகச் சித்தரிக்கும் 36 வயதி னிலே படத்திற்கு சிறப்பு பரி சும் வழங்கப்படுகிறது.
அதேபோல், சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர் களுக்கும் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விழாவில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப் ்பிரமணியன், பி.கே.சேகர் பாபு, மேயர் பிரியா உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.
விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் விருதாளர்கள், விழாவிற்கு தவறாமல் மாலை 5.30 மணிக்குள் அரங்கத்திற்கு அவசியம் வருகை தர வேண்டும். மேலும் பதிவு செய்தல், கையொப்பமிடு தல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று விழாக் குழு கேட்டுக்கொண்டு ள்ளது.