tamilnadu

குழந்தை பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி விடுதலை அரசு மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்

குழந்தை பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி விடுதலை அரசு மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை, அக்.8 - 6 வயது குழந்தையை பாலியல்  வன்கொடுமை செய்த வழக்கில்  போதிய ஆதாரங்கள் காவல்துறை யால் சமர்ப்பிக்கப்படவில்லை என்ப தால் குற்றவாளி தஷ்வந்தை விடு தலை செய்திருப்பது அதிர்ச்சி அளிக் கிறது என அனைத்திந்திய ஜனநாயக  மாதர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி.பிரமிளா, பொதுச் செய லாளர் அ.ராதிகா ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித் திருப்பதாவது:  சென்னை போரூரில் 6 வயது  குழந்தையை பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கி, கொலை செய்த  வழக்கில் குற்றவாளி தஷ்வந்த்க்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனை மற்றும் 46 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து, அவரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருப்பது அதிர்ச்சியும், கவலை யும் அளிக்கிறது. காவல்துறை யால் போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக் கப்படாத காரணத்தால், வழக்கி லிருந்து குற்றவாளி விடுவிக்கப் பட்டதாக கூறப்பட்டுள்ளது. கீழமை நீதிமன்றங்கள் விசா ரணை நடத்தி, குற்றத்தை உறுதி செய்த நிலையில் உச்ச நீதிமன்றம் குற்றவாளியை விடுவித்து இருப்பது  அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வழக்கில் தாக்கல் செய்யப் பட்ட காணொலி மற்றும் கண்காணிப்பு  கேமரா காட்சிகள் போதுமானவை அல்ல. டி.என்.ஏ சோதனை முடிவுகள்  ஒத்துப் போகவில்லை என்று கூறி அவரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. தமிழகத்தில் பெண் குழந்தைகள் மீதான வன் முறைகள் அதிகரித்து வருகிற இச்சூழலில் வழக்கின் தீர்ப்பு மிகுந்த  வேதனை அளிக்கிறது. முதல் கட்ட விசாரணையில் இருந்தே, நியாயமான-வேகமான விசாரணை நடைபெறாததால் 3 மாதங் களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல்  செய்யப்படவில்லை. இதனால் தஷ்வந்துக்கு பிணை கிடைத்தது.  தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில் காவல்துறை போதிய  ஆதாரங்களை தாக்கல் செய்திருக்க  வேண்டும். டி.என்.ஏ ஆய்வு முடிவு கள்கூட ஒத்துப்போகும்  வகையில் இல்லாததால் குற்றவாளி விடுதலை  செய்யப்பட்டிருக்கிறார். கொடூர மான இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தருவதற்கு தமிழக அரசும், காவல் துறையும் போதிய கவனம் செலுத்திடவில்லை என்பது தெரிய வருகிறது. பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை வழக்குகளில் தமிழக அர சின் காவல்துறையும் உரிய கவனம்  செலுத்திட வேண்டும். குற்றவாளி களுக்கு தண்டனை கிடைப்பதை  உறுதி செய்திடும் வகையிலான நட வடிக்கைகளில் ஈடுபட வேண்டும். பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தஷ்வந்த் விடு தலை செய்யப்பட்டதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் மறுஆய்வு மனுவை  தாக்கல் செய்ய வேண்டும்  என அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள் கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.