tamilnadu

img

 கள்ளக்குறிச்சியில்  மாதாந்திர ஆய்வுக் கூட்டம்  

 கள்ளக்குறிச்சியில்  மாதாந்திர ஆய்வுக் கூட்டம்  

கள்ளக்குறிச்சி, ஜூலை 30- கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகம் கூட்டரங்கில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமை யில் நடைபெற்றது. இதில், துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள்  குறித்து ஆட்சியர் கேட்டறிந்து ஆய்வு செய்தார். அதில் உரையாற்றிய ஆட்சியர், “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் துறை வாரியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மாதந்தோறும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது”என்றார். இந்த ஆய்வின்போது துறை வாரியாக செயல்படுத்தப்படும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வும், வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும்,  துறை வாரியாக செயல்பாடுகளை தொடர்ந்து முறையாக  மேற்கொள்ளவும், இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  அனைத்து துறைகளின் சார்பில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை நோக்கி துறை சார்ந்த அலுவலர்கள் செயல்படவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா, திருக்கோவிலூர் உதவி ஆட்சியர் ஆனந்த் குமார் சிங், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி உள்ளிட்ட அனைத்துத் துறை மாவட்ட நிலை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.