மன்னார்குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான டி.ஆர்.பி.ராஜா, இன்று அமைச்சராக பதவியேற்றார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின்பேரில், அமைச்சரவையிலிருந்து எஸ்.எம்.நாசர் விடுவிக்கப்படுவதாகவும், மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான டி.ஆர்.பி.ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்படுவதாகவும் கடந்த 9-ஆம் தேதி ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் அமைச்சராகப் டி.ஆர்.பி.ராஜா இன்று காலை பதவியேற்றுக்கொண்டார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.