மினி டைடல் பூங்கா: முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்
திருவண்ணாமலை, ஆக. 1- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக் கிழமை(ஆக.1) தலைமைச் செயலகத்தில் இருந்து தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை யின் சார்பில் திருவண்ணாமலையில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான 600 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 63,200 சதுர அடி கட்டுமான பரப்பளவில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலையில் நடை பெற்ற அடிக்கல் நாட்டு விழாவில், சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.