சென்னை, ஜூலை 5- சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025, மற்றும் சர்வதேச கூட்டுறவு நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, தமிழக கூட்டு றவுத்துறை சார்பில் கூப்பதான் மினி மாரத்தான் போட்டி ஞாயிறன்று(ஜூலை 6) நடைபெறவுள்ளது. ‘சமத்துவம் கூட்டுறவின் மகத்து வம்’, ‘’கூடுவோம், ஓடுவோம் கூட்டுற வால் உலகை வெல்வோம்’’ என்ற கருப் பொருளை கொண்டு மினி மாரத்தான் சென்னை தீவுத்திடலில் ஞாயிறன்று காலை 5.30 மணியளவில் நடை பெறவுள்ளது. கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மினி மராத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார். மினி மாரத்தான் தீவுத்திடலில் தொடங்கி வெற்றி போர் நினைவுச்சின்னம், அண்ணா சதுக்கம், விவேகானந்தர் இல்லம் வரை சென்று மீண்டும் அதே பாதையில் தீவுத்திடல் வந்தடையும். மொத்த தொலைவு 5 கி.மீ ஆகும். இப்போட்டியில் 18 வயது தொடங்கி 40 வயது உடையவர்கள், மேலும் 40 வயது முதல் அதற்கு மேல் 2000 க்கும் மேற்பட்ட முன்பதிவு செய்துகொண்ட நபர்கள் ஆண், பெண் என கலந்து கொள்ள உள்ளனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிர மணியன், பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார்.