tamilnadu

img

நாளை முதல் மெட்ரோ ரயில்கள் காலை 5 மணிமுதல் இரவு 11 வரை இயங்கும்  

சென்னையில் மெட்ரோ ரயில்கள் நாளை முதல் காலை 5 மணி முதல் இரவு 11 வரை இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு நாளை முதல் அனைத்து நாட்களிலும் (திங்கள்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை) காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.  

மேலும் வார நாள்களில்(திங்கள் முதல் சனி வரை) நெரிசல் மிகு நேரங்களில்(காலை 8-11, மாலை 5-8) 5 நிமிட இடைவெளியிலும் மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் இரவு 10-11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.  

ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாள்களில் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும் இரவு 10-11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.