tamilnadu

img

மெட்ரோ கட்டுமானத் தொழிலாளர்களின் மனிதநேய செயலுக்காக பாராட்டு

மெட்ரோ கட்டுமானத் தொழிலாளர்களின் மனிதநேய செயலுக்காக பாராட்டு

சென்னை, அக். 24- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்,HCC-KEC இன்டர்நேஷ்னல் நிறு வனத்தின் கீழ் பணிபுரியும் ஐந்து கட்டுமானத் தொழிலாளர்களின் மனித நேயமிக்க செயலைப் பாராட்டி பரிசு வழங்கியது. சமீபத்தில் பூந்தமல்லி பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள உணவகம் ஒன்றில் இருந்து வெளியே வந்த பெண்மணி ஒருவர், எதிர்பாராத விதமாகத் தனது தங்கக் காதணி ஒன்றை சாலையில் தேங்கி யிருந்த மழைநீரில் தவற விட்டார். இதை நேரில் கண்ட மெட்ரோ கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் உடனடி யாக முன்வந்து வாளிகள் மற்றும் குவளைகளைப் பயன்படுத்தித் தேங்கிக் கிடந்த நீரை வெளியேற்றி, காணாமல் போன காத ணியை மீட்டெடுத்து உரிமை யாளரிடம் ஒப்படைத்தனர். அவர்களின் இந்த தன்னலமற்ற மனிதநேயச் செயல் பொதுமக்களிடமும் ஊடகங்களிடமும் பாராட்டு  பெற்றதுடன், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் தொழிலாளர்களின் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தியது. இந்த மனிதநேயச் செயலை அங்கீகரிக்கும் வித மாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கட்டுமானத் தொழிலாளர்கள் எஸ்.கே.பரிகுல், எஸ்.கே.கலாம், எஸ்.கே.சுமோன், எஸ்.கே.பரியுல், அமீர் ஆகிய 5 பேருக்கும் தலா ரூ.2,000 வீதம் ரொக்கப் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கியது. இந்த பரிசு களை மெட்ரோ ரயில் நிறு வனத்தின் தலைமை பொது மேலாளர் எஸ்.அசோக் குமார் தொழிலாளர்களுக்கு வழங்கினார்.