tamilnadu

img

திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இயன்முறை மருத்துவ முகாம்

திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இயன்முறை மருத்துவ முகாம்

சென்னை, செப்.14- சென்னை கே.கே. நகரில் உள்ள மீனாட்சி இயன்முறை மருத்துவ கல்லூரி சார்பில் திரு வள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. “மக்களை தேடி இயன்முறை மருத்துவம் என்ற பெயரில் நடைபெற்ற இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். “வலி இல்லா சமூகமே இந்த முகாமின் மைய பொருளாகும் என்று மீனாட்சி இயன் முறை கல்லூரி முதல்வர் பார்தசாரதி தெரிவித்தார். இணை பேராசிரியர் ஹரிஹர சுப்ரமண்யன்’ தலைமையில்  ஸ்ரீமன், தேசப்பிரியன், சிந்து, சினேஹா, பவித்ரா ,புவியரசி ஆகிய 6 பேர் கொண்ட குழுவினர் செந்நீர் குப்பம் மற்றும் ஐயப்ப தாங்கல் ஆகிய கிராமங்க ளில் இயன்முறை முகாம் நடத்தியதாக கல்லூரி தாளாளர் ஜெயந்தி ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.