tamilnadu

img

துரைப்பாக்கத்தில் மருத்துவ முகாம்

சென்னை,அக்.2 இந்திய செஞ்சிலுவை சங்கம் தமிழக கிளை சார்பில் சென்னை துரைப்பாக்கத்தில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கவர்னர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார். இந்த முகாமில்  பொது மருத்தும், காது,மூக்கு, தொண்டை, பல், கண், எலும்பியல், தோல், உட்சுரப்பியல், நீரிழிவு மருத்துவர்கள் பங்கேற்ற னர். சித்தா மற்றும் ஆயுர்வேத  மருத்துவர்களும் கலந்து கொண்டனர். இந்த முகாமில் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை அவர்கள் பரிந்துரைத்த தோடு, மேலும் நோயாளிக ளுக்கு கூடுதலாக பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்கள். முன்னதாக இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக தலைவர் டாக்டர் ஹரிஷ் எல் மேத்தா வர வேற்றார். துணைத் தலைவர்கள் எஸ்.ஜி.பிரபாகரன், ஆர்.எம்.பாலசுப்பிரமணியம், பொருளாளர் டாக்டர் சி.இந்தர்நாத், பொதுச் செய லாளர் எம்.எஸ்.எம். நசுருதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.