tamilnadu

img

மரக்காணம் ஒன்றியத்தில் அரசு கல்லூரி: மாணவர் சங்க மாநாடு வலியுறுத்தல்

மரக்காணம் ஒன்றியத்தில் அரசு கல்லூரி:   மாணவர் சங்க மாநாடு வலியுறுத்தல்

விழுப்புரம், ஆக.14- விழுப்புரத்தில் நடை பெற்ற இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் மரக்காணம் ஒன்றியத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர். இந்திய மாணவர் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட 17வது மாவட்ட மாநாடு ஆகஸ்ட் 14 ஆம்தேதி வியாழக்கிழமை  விழுப்புரத்தில் நடை பெற்றது. மாவட்ட துணைத் தலைவர் எஸ்.சுபித்ரா தலைமை தாங்கினார். மத்தியக்குழு உறுப்பினர் கே.பி.சௌமியா மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் அரிகிருஷ்ணன் ஸ்தாபன வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். வாலிபர் சங்க தலைவர் எஸ்.பிர காஷ் வாழ்த்திப் பேசினார். மாணவர் சங்கத்தின் மாநில துணை நிர்வாகி தமிழ் பாரதி நிறைவுரையாற்றினார். இந்த மாநாட்டில் 15 பேர் கொண்ட மாவட்டக் குழுவின் தலைவராக சுபித்ரா. மாவட்டச் செயலாளராக மூ.ஜீவானந்தம் தேர்வு செய்யப்பட்டனர்.  இம் மாநாட்டில் மரக்காணம் ஒன்றியத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும்,காலியாக உள்ள பேராசிரியர், ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறை வேற்றினர். மாநாட்டில் மாணவர் சங்க நிர்வாகிகள் மதுமிதா, வி.அஜய், உதயா உட்பட பலர் கலந்து கொண்டனர்.