tamilnadu

img

குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதை தடுக்க வேண்டும் மாதர் சங்க பகுதி மாநாடு வலியுறுத்தல்

குடிநீருடன் கழிவுநீர் கலந்து  வருவதை தடுக்க வேண்டும் மாதர் சங்க பகுதி மாநாடு வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 27- புஷ்பா நகர் பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதை தடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய மாதர் சங்கத்தின் ஆயிரம் விளக்கு பகுதி மாநாடு வலியுறுத்தியுள்ளது. மாதர் சங்கத்தின் பகுதி மாநாடு சனிக்கிழமையன்று (ஜூலை 26) புஷ்பா நகரில் நடைபெற்றது.  மாநாட்டில், மேற்கு நமச்சிவாயபுரம் சலவை தொழிலாளர்கள் பணி செய்யும் இடத்தில் சமூக விரோதிகள் மது அருந்து வதை தடுக்க வேண்டும், கிழக்கு நமவாச்சியா புரம் பகுதிக்கென்று தனியாக ரேசன் கடை அமைப்பதோடு, கூவம் கரையோரம் நடைபாதை அமைக்க வேண்டும் என்ன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டிற்கு எம்.சாந்தி தலைமை தாங்கினார். ஜே.லட்சுமி வரவேற்றார்.  மத்தியசென்னை மாவட்ட துணைச்செயலாளர் ஆ.நாக ராணி துவக்க உரையாற்றி னார். மாவட்டச் செய லாளர் வெ.தனலட்சுமி நிறைவுரையாற்றினார், கோகிலா நன்றி கூறினார். 9 பேர் கொண்ட பகுதிக் குழுவின் தலைவராக ஜி.கலா, செயலாளராக எஸ்.சாந்தி, பொருளாளராக ஜெ.லட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.