tamilnadu

img

போதைப்பொருட்களை தடுக்க வேண்டும் மாதர் சங்க அண்ணாநகர் பகுதி மாநாடு வலியுறுத்தல்

போதைப்பொருட்களை தடுக்க வேண்டும் மாதர் சங்க அண்ணாநகர் பகுதி மாநாடு வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 31– இளைஞர்களை சீரழிக்கும் போதைப் பொருட்களை தடுக்க வேண்டும் என்று அனைத் திந்திய மாதர் சங்கத்தின் அண்ணா நகர் பகுதி மாநாடு வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் 17 வது பகுதி மாநாடு புதனன்று (ஜூலை 30) குஜ்ஜி தெரு வில் நடைபெற்றது. மாநா ட்டில், குண்டும், குழியு மாக உள்ளஅமைந்தகரை சாலையை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டிற்கு பகுதித் தலைவர் எம்.உஷா தலைமை தாங்கினார். சங்க கொடியை பகுதிக்குழு உறுப்பினர் இ.மங்கா ஏற்றினார். பகுதிக்குழு உறுப்பினர் கே.ராஜேஸ்வரி வரவேற்றார். பகுதிக்குழு உறுப்பினர் டி.தமிழரசி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மத்திய சென்னை மாவட்டச் செய லாளர் வெ.தனலட்சுமி துவக்கவுரையாற்றினார். பகுதிச் செயலாளர் ஆர்.நாகரத்தினம் அறிக்கையையும், பொரு ளாளர் எஸ்.ஜானகி வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். மாவட்டத் தலைவர் ஏ.சாந்தி நிறைவு ரையாற்றினார். பகுதி பொருளாளர் எஸ்.ஜானகி நன்றி கூறினார். நிர்வாகிகள் தேர்வு 9 பேர் கொண்ட பகுதிக் குழுவின் தலைவராக ஆர்.நாகரத்தினம், செய லாளராக எம்.உஷா, பொருளாளராக மும்தாஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.