tamilnadu

img

மிக்ஜம் புயல் நிவாரண பணியில் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள்

சென்னை, டிச. 8 - மிக்ஜம் புயல் நிவாரணப் பணிகளில்  மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களும், ஊழி யர்களும் மிகுந்த அர்ப்பணிப்புடன் சுழன்று பணியாற்றி வருகின்றனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுவது, முகாம்களுக்கு கொண்டு செல்வது, கொட்டும் மழை, தேங்கிய வெள்ளம் இவற்றுக்கிடையே பல்வேறு இடங் களில் உணவு சமைத்தும், பிற  பகுதிகளில் இருந்து உணவு பொருட் களையும், அத்தியாவசிய பொருட் களையும் பெற்று விநியோகம் செய்து வருகின்றனர்.

கே.பாலகிருஷ்ணன்
வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலை யில் கட்டுமான பணிக்காக 50 அடி  பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. இந்த பள்ளத்தில் கட்டுமான பொறி யாளர் தங்கியிருந்த கன்டெய்னர் வீடு சரிந்தது. இதனால் அருகில் இருந்த பெட்ரோல் நிலைய அலுவலகமும் பள்ளத்திற்குள் விழுந்தது. இந்த மீட்பு பணிகளை டிச.6 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் நேரில்  பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தினார்.

இதனை தொடர்ந்து பெருங்குடி, கல்லுகுட்டை பகுதியை வெள்ளியன்று (டிச.8) கே.பாலகிருஷ்ணன் பார்வை யிட்டு, அங்குள்ள மக்களின் தேவை களையும் கேட்டறிந்தார்.

கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சு.வெங்கடேசன் எம்.பி., ஆய்வு
தாம்பரம் மாநகராட்சி, பீர்க்கன்கர ணை பகுதியை டிச.7 அன்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆய்வு செய்தார். பாதாள சாக்கடை இல்லாத தால் கழிவு நீரும், மழைவெள்ளமும் கலந்து சில இடங்களில் தேங்கி உள்ள நீரை அகற்ற மாநக ராட்சி அதிகாரிகளை அறிவுறுத்திய தோடு, அடுத்தடுத்து மேற்கொள்ளப் பட்ட பணிகளை பட்டியலிட்டார். இதனைத்தொடர்ந்து மக்களுக்கு உணவுகளை வழங்கினார்.

இந்நிகழ்வுகளின்போது கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாதர் சங்கத்தின் அகில இந்திய செயலாளர் பி.சுகந்தி, மாநில பொருளாளர் வ.பிரமிளா,  சிபிஎம் செயற்குழு உறுப்பினர்கள் கே.வனஜகுமாரி, எஸ்.குமார்,  செயற் குழு உறுப்பினர்  ஜி.செந்தில்குமார், பகுதிச் செயலாளர்கள்  தா.கிருஷ்ணா (தாம்பரம்), எஸ்.ரஃபி (வேளச்சேரி), பி.ஜெயவேல் (சோழிங்கநல்லூர்), மாவட்டக்குழு உறுப்பினர் தீ.சந்துரு, தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சரவண செல்வி, மாவட்டச் செய லாளர் எம்.சித்ரகலா, பொருளாளர் ஜே.ஜூலியட், தாம்பரம் பகுதிச் செயலாளர் ஆர்.விஜயா ஆகியோர் உடனிருந்தனர்.