tamilnadu

img

திருவொற்றியூரில் மார்க்சிஸ்ட் ஆண்டு சந்தா ஒப்படைப்பு

திருவொற்றியூரில் மார்க்சிஸ்ட் ஆண்டு சந்தா ஒப்படைப்பு 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவொற்றியூர் வடக்கு பகுதிக் குழு சார்பில் தோழர் சீதாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, உடல் தான பதிவு படிவம், மார்க்சிஸ்ட் ஆண்டு சந்தா ஒப்படைப்பு, செந்தொண்டர்களுக்கு பாராட்டு விழா ஞாயிறன்று (செப். 14) நடைபெற்றது. இதில் மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தர்ராஜன் கலந்து கொண்டு 12 பேர் உடல் தானம் பதிவு படிவத்தையும், 32 மார்க்சிஸ்ட் சந்தாவையும் பெற்றுக் கொண்டு, செந்தொண்டர்களுக்கு நினைவு பரிசும் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், நிர்வாகிகள் கே.வெங்கடையா,  அலமேலு, கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.