அரிசி மீதான ஜிஎஸ்டி ரத்து செய்க: மணலி மாதர் சங்க மாநாடு வலியுறுத்தல்
சென்னை, ஜூலை 14- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மணலி பகுதி 17ஆவது மாநாடு ஞாயிறன்று (ஜூலை 13) நடைபெற்றது. தலைவர் நீலவேணி தலைமை தாங்கி னர். உஷா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கிய லட்சுமி மாநாட்டை துவக்கி வைத்து பேசி னார். செயலாளர் சரஸ்வதி வேலை அறிக் கையையும், வரவு,செலவு அறிக்கையை யும் சமர்ப்பித்தார். அமைப்பு சாரா பகுதி தலைவர் சிட்டிபாபு வாழ்த்திப் பேசினார். மாவட்டத் தலைவர் எம்.கோட்டீஸ்வரி மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக லதா வரவேற்றார். கீதா நன்றி கூறினார். தீர்மானங்கள் ரேசன் கடையில் அனைத்து அத்தி யாவசிய பொருட்களையும் தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும், பெண்கள், பெண் குழந்தைகள் மீதான வன்முறை களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இ-பஸ்களை தனியாரிடம் வழங்கி இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு தலைவராக உஷா, செயலாளராக நீலவேணி, பொருளாளராக லதா உள்ளிட்ட 9 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.