tamilnadu

img

ஓசூரில் மலபார் கோல்டு, டைமண்ட்ஸ் 32வது கிளை திறப்பு

ஓசூரில் மலபார் கோல்டு, டைமண்ட்ஸ் 32வது கிளை திறப்பு

கிருஷ்ணகிரி, ஆக. 2- ஓசூர் பேருந்து நிலையத்தை ஒட்டி ஆனந்த் பவன் உணவகம் அருகில் மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் 32வது கிளையை ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் மற்றும் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா திறந்து வைத்தனர். இந்நிறுவனத்தின் மண்டல தலைவர் யாசர், தமிழ்நாடு மண்டல வணிக தலை வர்கள் சபீர் அலி, மேற்கு மண்டல தலை வர் நவ்ஷாத், வடக்கு மண்டல தலை வர் அமீர் பாபு, ஓசூர் கிளை தலைவர் நோயல் பென் அலியாஸ், இந்நிறுவன மேலாண்மை உறுப்பினர்கள், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இங்கு வைரம், வெள்ளி, தங்கம் நகை களின் தொகுப்புகள் நிறைந்துள்ளது. 13 நாடுகளில் 400க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், திரு நெல்வேலி, சேலம் உள்ளிட்ட 32 நகரங்களில் கிளைகள் உள்ளது. வெட்டாத வைரம், பிசியா, எத்தினிக் உள்ளிட்ட சிறப்பு நகைகள் உள்ளது. ஹெச்யுஐடி, ஐஜிஐ, பிஜிஐ சான்றுகள் பெற்ற தங்க வைர பிளாட்டின நகைகள் உள்ளன. வெளிப்படையான விலை, சரி யான எடை, சேதாரம், கற்களுக்கான விலை, அதன் நிகர எடை சரியாக குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு வாங்கும் நகைகளுக்கு ஆயுள் முழுவதும் இலவச பராமரிப்பு மற்றும் அனைத்து நகைகளையும் எப்போது வேண்டுமானாலும் திரும்ப பெற்றுக் கொள்ளும் உத்தரவாதம் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் சமூக பொறுப்பு முன்முயற்சிகள் மேற்கொள்கிறது. லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சுகா தாரம், கல்வி, வீட்டு வசதி, சுற்றுச்சூழல் பாது காப்பு மற்றும் மகளிரை அதிகார மய மாக்கல் என சமூக பொறுப்பு திட்டங்க ளுக்கு நிறுவனம் செலவு செய்கிறது என்று நிர்வாகிகள் கூறினர்.