சென்னை:
நடிகர் கமல்ஹாசன் மக்கள்நீதி மய்யம் என்றபெயரில் கட்சி தொடங்கி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். சென்னையின் 3 தொகுதிகள் மற்றும் கோவை, பெரம்பலூர் உள்ளிட்ட சில தொகுதிகளில் 3 வது இடம் கிடைத்துள்ளது. முக்கியமாக பிரபலங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் மூன்றாமிடமும் மற்ற தொகுதிகளில் நான்காவது, ஐந்தாம் இடங்களும் கிடைத்து வருகின்றன. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 3 முதல் 4 சதவீத வாக்குகள் மக்கள் நீதி மய்யம் கட்சி பெற்றிருக்கிறது.