tamilnadu

தூய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்க புதுவை அரசுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

தூய்மை  பணியாளர்களை நிரந்தரம் செய்க புதுவை அரசுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

புதுச்சேரி, செப்.9 - தூய்மை  பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி உழவர்கரை நகர மாநாடு புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் உழவர்கரை நகர 5 ஆவது மாநாடு தெய்வசிகாமணி தலைமையில் நடை பெற்றது. மாநிலத் தலைவர் கொளஞ்சி யப்பன் துவக்கி வைத்து பேசினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநில துணைத் தலைவர் ஜி.ஆனந்தன் பங்கேற்று “சாதி ஆணவ படுகொலையைத் தடுக்க சிறப்பு சட்டம்” என்கிற தலைப்பில் சிறப்புரையாற்றினார். சிபிஎம் மாநிலச் செயலாளர் ராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் வெ.பெருமாள், பிரபுராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிர்வாகிகள் தேர்வு தலைவராக தெய்வசிகாமணி, செயலாளராக வீர.அரிகிருஷ்ணன், பொரு ளாளராக கே.குப்புசாமி உள்ளிட்ட 12 பேர் கொண்ட நகரக்குழு தேர்வு செய்யப்பட்டது. பாராட்டு உழவர்கரை நகராட்சி பகுதிகளில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மேல்நிலை வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாண வர்கள், சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இணையர்களை பாராட்டி கேடயம் வழங்கினர். தீர்மானம் சாதி ஆணவப் படுகொலையைத் தடுக்க தனி சிறப்பு சட்டம் ஒன்றிய மாநில அரசுகள் இயற்ற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆதி திராவிடர் மாணவ விடுதிகளை எல்லாவித மான அடிப்படை வசதிகளுடன் பராமரிக்க வேண்டும். பள்ளிக்கூடம், கல்லூரி பெயர்க ளிலும், வீதி பெயர்களிலும் இருக்கிற சாதி அடையாளங்களை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.