tamilnadu

சென்னை, காஞ்சிபுரம் முக்கிய செய்திகள்

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் ரத்து
சென்னை, அக்.17- தாம்பரம் - செங்கல்பட்டு இடையே பராமரிப்பு பணி காரணமாக 18 முதல் 20 ஆம் தேதி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- அக்டோர் 18 முதல் 20 வரை மூன்று நாட்கள் கடற்கரையில் இருந்து காலை 3.55க்கு புறப்படும் ரயில் கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையிலும், 4.55க்கு புறப்படும் ரயில் காட்டாங்கொளத்தூர் - செங்கல்பட்டு இடையிலும், 4.35 க்கு புறப்படும் ரயில் தாம்பரம் -செங்கல்பட்டு இடையிலும் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், செங்கல்பட்டில் இருந்து காலை 3.55 க்கு புறப்படும் ரயில் செங்கல்பட்டு-காட்டாங்கொளத்தூர் இடையி லும், 4.50 க்கு புறப்படும் ரயில் செங்கல்பட்டு-கூடுவாஞ்சேரி இடையிலும், 4.35 க்கு புறப்படும் ரயில் செங்கல்பட்டு-தாம்பரம் இடையிலும், 6.40 மணிக்கு புறப்படும் ரயில் செங்கல்பட்டு-காட்டாங்கொளத்தூர் இடையிலும் ரத்து செய்யப்படுகிறது. 20 ஆம் தேதி கடற்கரையில் இருந்து 3.55 க்கு புறப்படும் ரயில் செங்கல்பட்டு - காட்டாங்கொளத்தூர் இடையிலும், 4.35 க்கு புறப்படும் ரயில் தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலும் ரத்து செய்யப்படுகிறது.. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

தரமான விதை உற்பத்தி குறித்து பயிற்சி
மதுராந்தகம், அக்.17-  காஞ்சிபுரம் மாவட்டம் வேளாண் துறை விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று துறை சார்பில் மதுராந்தகம், அச்சிறு ப்பாக்கம், சித்தாமூர், திருக்கழுக்குன்றம், காட்டாங்குள த்தூர், திருப்போரூர், சிட்லபாக்கம், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விதைப்பண்ணை விவசாயிகளுக்கு தரமான விதைகள் குறித்து பயிற்சி மது ராந்தகம் வேளாண்மைத் துறை அலுவலகத்தில் வியாழனன்று (அக்.17) அளிக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் ஜோசப் ஹெக்டர் பயிற்சி முகாமை துவக்கிவைத்தார்.இயக்குனர் கு.ஜெயராமன், வேளாண்மை உதவி இயக்குநர் சரவணன், விதைச் சான்று அலுவலர் பால பாரதி ஆகியோர் தரமான விதைகள் உற்பத்தி குறித்து எடுத்துக் கூறினர்.