மாவீரன் பகத்சிங் பிறந்த நாள்: மாணவர் சங்கம் சார்பில் கருத்தரங்கம்
சேலம், செப் 27- ‘சாதிய ஒழிப்பு பற்றி விடுத லைப் போராட்டத்தில் குரல் எழுப்பி யவர் பகத்சிங்’ என சேலம் மாணவர் சங்க கருத்தரங்கில், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு பேசி னார். மாவீரன் பகத்சிங் பிறந்த தினத்தை முன்னிட்டு சனியன்று முற்போக்கு அமைப்புகள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன்ஒருபகுதி யாக இந்திய மாணவர் சங்க சேலம் மாவட்டக்குழு சார்பில் சிறப்பு கருத் தரங்கம் சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் சனியன்று நடை பெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்டத் தலைவர் டார்வின் தலைமை வகித் தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கீர்த்தனா வரவேற்புரையாற்றி னார். சிறப்பு விருந்தினராக கல்வி யாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு பேசு கையில், சாதி ஒழிப்பு பற்றி முதலில் இந்திய விடுதலை போராட்டத்தின் போது குரல் எழுப்பியவர் பகத்சிங். சமீபத்தில் பல்கலைக்கழக மானிய குழு வெளியிட்ட எல்ஓசிஎஃப்-ல் ஆபத்துகள் பற்றியும், அதன் கீழ் பயிலும் மாணவர்கள் பட்டம் பெற் றால் அவர்களது கல்வி தரம் என்ன வாக இருக்கும் என்கின்ற கேள் வியை எழுப்பினார். கேஸ் லைட் டிங் தியரி அதற்கு சாட்சியாக தேசிய கல்விக் கொள்கையை 2020 உள்ளது என்பதைப் பற்றியும், பகத்சிங் கண்ட கனவான சோசலி சத்தை அடைவதற்கான போராட் டத்தை மாணவர்கள் நடத்த வேண் டும், என்றார். பின்னர் சேலம் மாவட்டத்தின் எதிர்கால பணிகளை குறித்து சங் கத்தின் மாவட்டச் செயலாளர் பவித் ரன் விளக்கி பேசினார். இறுதியாக மாநிலக்குழு உறுப்பினர் காவியா நன்றி கூறி கருத்தரங்கத்தை நிறைவு செய்தார். இதில் ஏராள மான மாணவர்கள் பங்கேற்றனர் கோவை இதேபோன்று இந்திய மாண வர் சங்க கோவை மாவட்ட குழு சார்பில் காந்திபுரம் காட்டூர் அலு வலகத்தில் வெண் கொடி ஏற்றி, சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. இந் நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் பாவெல் தலைமை வகித்தார். இந் திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை மாவட்டப் பொருளாளர் அர்ஜூன் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் அகமது ஜூல்ஃபிகர் உரையாற்றினார். இதில், மாணவர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் உமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நீலகிரி இந்திய மாணவர் சங்கத்தின் நீலகிரி மாவட்டக்குழு சார்பில் சனி யன்று நடைபெற்ற கருத்தரங்கில், சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் மணிகண்டன் சிறப்பு ரையாற்றினார். இதில் மாவட்டச் செயலாளர் குமரன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
