117 மருந்து கடைகள் மீது நடவடிக்கை
சென்னை, நவ.11- மாநிலம் முழுவதும் சட்டவிரோத மாக கருக்கலைப்பு, போதை தரக் கூடிய மாத்திரைகளை விற்பனை செய்த 117 மருந்து கடைகள் மீது மருந்து கட்டுப்பாட்டுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மற்றும் போதை தரக்கூடிய மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, சட்டவிரோதமாக கருக்கலைப்பு மற்றும் போதை தரக்கூடிய மாத்திரைகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 117 மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மருந்து விற்பனை கடைகளில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். ஒவ்வொரு கடைகளும் தாங்கள் விற்பனை செய்யும் மருந்து, மாத் திரைக்கான ஆவணங்களை முறை யாகப் பராமரிக்க வேண்டும். குறிப் பாக, கருக்கலைப்பு, போதை தரக் கூடிய மாத்திரை விற்பனை குறித்த ஆவணங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். அவ்வாறு ஆவணங்கள் இல்லாமல் இருந்த 117 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 6 கடைகளுக்கு விற்பனை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் மகன் மீது தாக்குதல்
சென்னை, நவ.11- தமிழ்நாடு வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரனின் மகன், பேரன் உள்பட குடும்பத்தினர் தேனாம்பேட்டை ஜி.என்.செட்டி சாலையில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்கில் வெள்ளிக் கிழமை (நவ.10) இரவு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்-2 என்ற படம் பார்க்க சென்றுள்ளார்கள்.
இரவு 10.50 மணிக்கு காட்சி தொடங்கியது. படம் ஓடிக் கொண்டி ருந்த போது அவர்களுக்கு பின் இருக்கையில் அமர்ந்து இருந்த 3 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் காட்சி களை பார்த்து விசில் அடித்தும், ஆவேசமாக கூச்சல் போட்டும் இடையூறு செய்துள்ளனர்.
அமைச்சரின் குடும்பத்தினர் அவர்களிடம் அமைதியாக இருங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென்று அமைச்சரின் மகன் ரமேஷ் (50) பேரன் கதிர் ஆகியோரை தாக்கி இருக்கிறார்கள். இதனால் கதிருக்கு ரத்த காயம் ஏற்பட்டது.உடனே தியேட்டர் நிர்வாகத்தினர் சமாதானப்படுத்தி இருக்கிறார்கள். அந்த தருணத்தை பயன்படுத்தி அவர்கள் 6 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
காயமடைந்த கதிர் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதிகாலை 4 மணிக்கு அவர் வீடு திரும்பினார்.இது தொடர்பாக தேனாம் பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 6 பேரையும் தேடி வருகிறார்கள்.
கண்ணாடி அணிந்து பட்டாசு வெடிக்க மருத்துவர் அறிவுரை
சென்னை,நவ.11- சென்னை தி.நகரில் உள்ள ராஜன் கண் மருத்துவமனை தலைவர் மற்றும் மருத்துவ இயக்குநர் மோகன் ராஜன் கூறியிருப்பதாவது: தீபா வளிக்கு பட்டாசு வெடிக்கும் போது, அதன் துகள்கள் கண்ணில் படுவதால், விழித்திரை, கருவிழி, கண் இமை மற்றும் சுற்றியுள்ள தோல் போன்ற வற்றில் காயங்கள் ஏற்படலாம். பார்வை நரம்புகள் பாதிக்கும். கண்ணின் மெல்லிய ரத்த நாளங்களில் துகள்கள் படும்போது, கண்ணுக்குள் இரத்தப்போக்கு ஏற்படக்கூடும். எனவே, பட்டாசு வெடிக்கும் போது கண்களில் சிறிய அல்லது பெரிய காயங்கள் ஏற்பட்டால், உடனடியாக கண் மருத்துவரை அணுகி, சிகிச்சை பெற வேண்டும். இல்லையென்றால் பார்வை இழப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கண்களைப் பாதுகாக்க, கண்ணாடி அணிந்து பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பெற்றோரின் மேற்பார்வை யில்தான் குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.