தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் '
புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
புதுச்சேரி, ஜூலை 23 - தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள தொழிற் சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர் களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை புதுச்சேரி அரசு வருடந்தோறும் நிர்ண யம் செய்து அதற்கான உத்தரவை பிறப்பிக்கும். இந்நிலையில் தொழிற்சாலைகளின் முதலாளிகளின் தூண்டுதலால் 2016 ஆம் ஆண்டுக்குப் பின் புதுச்சேரி அரசு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்து அதற்கான உத்தரவை பிறப்பிக்கவில்லை. சிஐடியு புதுச்சேரி மாநிலக்குழு சார்பில், குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்து அதற்கான உத்த ரவை வெளியிட வேண்டும் என்று அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. மேலும், தொழிலாளர்களை திரட்டி போராட்டங்கள் நடத்தியது. அத்துடன், தொழிலாளர் துறை அதிகாரிகளை சந்தித்தும் வலியுறுத்தி வந்தது. பின்னர் குறைந்தபட்ச ஊதிய நிர்ணய குழுவை புதுச்சேரி தொழிலாளர் நலத் துறை அமைத்தது. அதன்படி, குழுவின் பரிந்துரைப்படி 2016 ஆம் ஆண்டில் இருந்து ஒன்பது ஆண்டுகள் கழித்து குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்து அரசால் 2024 ஆம் ஆண்டு ஆணை வெளியிடப்பட்டது. குறைந்தபட்ச கூலி நிர்ணயம் செய்து வெளியிடப்பட்ட உத்தரவை தொழிற்சாலை முதலாளிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதை மறுத்ததோடு ஏற்கெனவே புதுச்சேரி அரசு பிறப்பித்த குறைந்தபட்ச கூலி நிர்ணய ஆணை செயல்படுத்தக் கூடாது என தடை யாணை கோரி 2016 ஆம் ஆண்டே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கு விசாரணையை 2023 ஜூலை 12, அன்று சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்து சில வழிகாட்டு நெறிமுறை களை வகுத்ததோடு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யும்படி புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டி ருந்தது. நீதிமன்ற உத்தரவை புதுச்சேரி அரசு அமல்படுத்தாத நிலையில் மீண்டும் முதலாளிகள் 2023 ஆம் ஆண்டு நீதி மன்ற உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இந்திய தொழிற்சங்க மையம், சிஐடியு புதுச்சேரி மாநில குழுவும் பிரதிவாதி யாக இணைந்துகொண்டது. புதுச்சேரி தொழிலாளர்களின் நியாயத்தை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு மூலம் சிஐடியு புதுச்சேரி மாநில குழு நீதிமன்றத்தில் எடுத்துரைத் தது. இவ்வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.தண்டபாணி முன்னிலையில் ஜூன் 19 அன்று நடை பெற்றது. தற்போது உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் என்பது தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படவில்லை. இருப்பினும் தற்போது புதுச்சேரி அரசு எடுத்த முடிவையாவது அமல் படுத்தி தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச நியாயத்தை நீதிமன்றம் உத்தரவு வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் சிஐடியு வலியுறுத்தியது. முத்தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த சென்னை உயர்நீதி மன்றம் முதலாளிகள் சார்பில் அரசின் குறைந்தபட்ச ஊதியம் வழங்குவதற் காக தடை ஆணை கேட்டு போடப் பட்டிருந்த அத்தனை வழக்குகளையும் தள்ளுபடி செய்ததோடு புதுச்சேரி அரசு பிறப்பித்துள்ள குறைந்தபட்ச ஊதிய நிர்ணய ஆணையை உடனடி யாக அமல்படுத்துமாறு புதுச்சேரி அரசின் தொழிலாளர் துறைக்கு நீதி மன்றம் உத்தரவிட்டது.
சிஐடியு வரவேற்பு
நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை சிஐடியு புதுச்சேரி மாநிலக்குழு வரவேற்றுள்ளது. இது குறித்து சிஐடியு புதுச்சேரி மாநில பொதுச்செயலாளர் ஜி.சினுவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் புதுச்சேரி அரசு சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளாக தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமை மறுக்கப்பட்டதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதிமன்றத்தில் தொழிலாளர்களுக்காக திறம்பட வாதாடிய வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யுவிற்கு சிஐடியு புதுச்சேரி மாநில குழுவின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.