எதிர்பார்ப்புகளற்ற அன்பு இல்வாழ்வை நல்வாழ்வாக்கும்
இளைய தலை முறையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
சென்னை, ஆக.20- திமுக தலைவரும் தமிழக முதல மைச்சருமான மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (ஆக.20) தனது 50-வது திருமண நாளை கொண்டாடினார். மு.க.ஸ்டாலினுக்கும் துர்க்காவதிக்கும் கடந்த 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று திருமணம் நடைபெற்றது. 50-வது திருமண நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அரைநூற்றாண்டாக என் வாழ்வின் துணையாக என்னில் பாதியாக துர்கா நுழைந்து, தன்னுடைய அன்பால் மண வாழ்வை மனநிறைவான வாழ்க்கை யாக அளித்துள்ளார். அவர் மீதான அளவற்ற அன்பே என் நன்றி. எதிர் பார்ப்புகளற்ற அன்பும் விட்டுக் கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ் வாக்கும் என இளைய தலைமுறை யினருக்குச் சொல்லிக் கொள்கிறோம். வீடும் நாடும் போற்றும் வாழ்வை அனைவரும் வாழ்த்த விழைகிறோம்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, தயாளும்மாளிடம் இருவரும் ஆசி பெற்றனர். இதைத் தொடர்ந்து கலை ஞர் நினைவிடம் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். கட்சி தலைவர்கள் வாழ்த்து இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் மு.க.ஸ்டாலினின் சென்னை ஆழ்வார் பேட்டை முகாம் அலுவலகத் தில் செவ்வாய்க்கிழமை (ஆக.20) நடந்தது. இந்தக் கூட்டத்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந் தகை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிபிஎம் செயலாளர் பெ.சண்முகம்,சிபிஐ மாநிலச் செய லாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹி ருல்லா, கொமதேக தலைவர் ஈ.ஆர். ஈஸ்வரன், தவாக தலைவர் தி.வேல் முருகன் ஆகிய 10 கட்சிகளின் தலை வர்கள் கலந்து கொண்டனர்.