தனி நலவாரியம் அமைக்க வேண்டும்
சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தல்
திருவள்ளூர், ஜூலை 6- திருவள்ளூர் மாவட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் சனிக்கிழமையன்று (ஜூலை 5), பெரியபாளையத்தில் நடைபெற்றது. இதற்கு பகுதி குழு உறுப்பினர் சி.நாகேஷ்ராவ் தலைமை தாங்கினார்.பனப்பாக்கம் கிளை தலைவர் கே.நாராயணன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜெ.ரமேஷ் வரவேற்றார். சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். கட்டுமான சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் ஆறுமுகம் வாழ்த்தி பேசினார். சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆர்.அருண்குமார் மாநாட்டை முடித்து வைத்து பேசினார். நிர்வாகிகள் தேர்வு சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவராக வி.இ.பாபு, மாவட்ட செயலாளராக கே.நாராயணன், பொருளாளராக சி.நாகேஷ்ராவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும், பணப் பயன்களை அதிகப்படுத்த வேண்டும், ஆன்லைன் குளறுபடிகளை சீரமைக்க வேண்டும், குடிமனை பட்டா வழங்க வேண்டும், சுங்கச்சாவடியில் வரும் வருவாயில் 1 சதவீதத்தை சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ஒதுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். மாவட்ட நிர்வாகி சங்கர் நன்றி கூறினார்.
ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது
சென்னை, ஜூலை 5- சென்னை அடையாறில் ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததாக இரு வர் கைது செய்யப்பட்டனர். அடையாறு பெசன்ட்நகர் பகுதி யில் ஒடிசா மாநிலத்தைச்சேர்ந்த 2 பேர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவ தாக அடையாறு போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் பெசன்டநகர் பகுதியில் இருவரிடம் விசா ரணை மேற்கொண்டதில் அவர்கள், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இச் சோதனையில் அந்த பையில் இருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, விசாரணை செய்தனர். விசார ணையில் அவர்கள், ஒடிஸாவைச் சேர்ந்த சரோஜ் பந்து தாஸ் (49), லிபன்குமார் தாஸ் (37) என்பது தெரியவந்தது. இதை யடுத்து காவல் துறையினர் இருவரையும் கைது செய்தனர்.