சென்னை:
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கடந்த 2 நாள்களில் 465 கோடியே 79 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.டாஸ்மாக் கடைகளில் தீபாவளி அன்றும் 14ஆம் தேதி 237 கோடியே 91 லட்சம் ரூபாய்க்கும் அதுக்கு முந்தைய நாளான நவம்பர்13ஆம் தேதி 227 கோடியே 88 லட்சம் ரூபாய்க்கும் மது விற்பனையாகியுள்ளது.2 நாள்களில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் மட்டும் 103 கோடியே 82 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. சென்னை மண்டலத்தில் 94 கோடியே 36 லட்சம் ரூபாய்க்கும் மதுவிற்பனை யாகியுள்ளது.