இடதுசாரிகளின் ஒற்றுமையே பாஜக ஆட்சியை வீழ்த்தும் சிபிஐ மாநாட்டை வாழ்த்தி எஸ். ராமச்சந்திரன் பேச்சு
புதுச்சேரி, செப். 2- என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியை வீழ்த்துவதற்கு இடதுசாரிகள் தலைமையில் பரந்த மேடை அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் எஸ். ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி 24வது மாநில மாநாடு ரெட்டியார்பாளையத்தில் கொடி யேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை (செப்.2) துவங்கியது.பொது மாநாட்டிற்கு அக்கட்சியின் புதுச்சேரி மாநிலச் செய லாளர் அ.மு.சலீம் தலைமை தாங்கினார். மாநாட்டில் பங்கேற்று வாழ்த்தி பேசிய சிபிஎம் மாநிலச் செயலாளர் எஸ்.ராமச்சந்திரன், “இந்திய நாட்டை பாதுகாக்க இடதுசாரிகள் முன்முயற்சியின் காரண மாகவே பல்வேறு கட்சிகளை ஒருங்கி ணைத்து இந்தியா கூட்டணி ஏற்படுத்தப் பட்டது. பாசிச தன்மை கொண்ட பாஜகவை விரட்டியடிக்க இடதுசாரிகளின் ஒற்றுமை இன்றைக்கு மிகவும் அவசியமாகும்”என்றார். புதுச்சேரியின் விடுதலைப் போராட்ட த்தை முன்னின்று நடத்தியவர்கள் கம்யூ னிஸ்டுகள் என்றும், என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து ஓரணியில் திரள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இடது சாரிகள் உள்ளடக்கிய ஒரு பரந்த மேடையை புதுச்சேரியில் அமைத்து எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். முன்னதாக, அக்கட்சியின் தேசிய செயலாளர் நாராயணா மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். சிபிஐ எம்எல் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர் சோ.பாலசுப்ரமணியன்,சிபிஐ புதுச்சேரி மாநில நிர்வாகிகள் விஸ்வநாதன், நாரா.கலைநாதன், ராமமூர்த்தி, சேது செல்வம், தினேஷ் பொன்னையா, கீதநாதன், ஜெய பாலன் உள்ளிட்ட திரளான பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றனர்.