tamilnadu

img

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் வெற்றி பெற்ற தலைவர்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்

திமுக தலைமையிலான மதர்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில்  திருப்பெரும்புதூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற டி.ஆர்.பாலு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனை சந்தித்து நன்றி தெரிவித்தார். உடன் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. உள்ளார்.

********************

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  மதுரை, கோவை மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற  பி.ஆர்.நடராஜன், சு.வெங்கடேசன் ஆகியோர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சந்தித்து நன்றி தெரிவித்தனர். உடன் மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி உள்ளனர்.

********************

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரை சனிக்கிழமையன்று (மே 25) சந்தித்து நன்றி தெரிவித்தார்.

********************

ஈரோடு மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்ற மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி சென்னையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து வாழ்த்துபெற்றார். உடன் மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி உள்ளார்.

********************

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கடலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்  டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனை சந்தித்து நன்றி தெரிவித்தார். உடன் திமுக மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளார்.