tamilnadu

img

குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வழக்கறிஞர்கள் சாலை மறியல்...

ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல்  சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில்  நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.கதிரேசன் தலைமை தாங்கினார். மறியலில் மாநில துணை செயலாளர் ஏ.சங்கரன், மாநில குழு உறுப்பினர்கள் தமிழரசன், மார்த்தாண்டம், மாவட்ட தலைவர் எஸ்.பாலமுருகனா,மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.கண்ணப்பன், மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ்,  வழக்கறிஞர்கள் ரஞ்சித், வெங்கடேசபெருமாள், பழனி, பிரபு உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.