tamilnadu

img

கே.கே.சி.பாலுவிற்கு கலைமாமணி விருதா? தமுஎகச தென்சென்னை மாவட்ட மாநாடு எதிர்ப்பு

கே.கே.சி.பாலுவிற்கு கலைமாமணி விருதா? தமுஎகச தென்சென்னை மாவட்ட மாநாடு எதிர்ப்பு

சென்னை, செப். 28 - நாட்டுப்புறக் கலைஞர் கே.கே.சி.பாலுவிற்கு கலை மாமணி விருது அறிவிப்பை திரும்ப பெற வேண்டு மென்று தமுஎகச வலி யுறுத்தி உள்ளது. சங்கத்தின் தென் சென்னை மாவட்ட 16வது மாநாடு ஞாயிறன்று (செப்.28) சாலிகிராமத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், கொங்கு மண்டலத்தில் குறிப்பிட்டச் சாதியைச் சார்ந்த இளம் பெண்களை அணி திரட்டி,  நாட்டுப்புறக் கலையான வள்ளி கும்மி நடத்தப்படு கிறது. ஆட்டத்தின் ஊடாக, சொந்தச் சாதிப் பெரு மிதங்களைப் பாடி ‘வேறு சாதி ஆண்களைத் திரு மணம் செய்ய மாட்டேன்’ என ஒவ்வொரு இளம் பெண்ணி டமும் சத்தியம் பெறுகிறார் கள். நாட்டுப்புறக் கலையில் சாதி வெறியூட்டுதலை மைய நோக்கமாக மாற்றிய வர் கே.கே.சி.பாலு. இவருக்கு அறிவிக்கப்பட் டுள்ள தமிழ்நாடு அரசின்  உயர்ந்த விருதான கலை மாமணி விருது அறிவிப் பைத் திரும்பப்பெற வேண்டும். கோபதி நாராயணா சாலையில் இருந்து அகற்ற ப்பட்ட அதே இடத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை மீண்டும் நிறுவ வேண்டும், சர்.பிட்டி. தியா கராயர் அரங்கை புதுப் பிக்க வேண்டும், அண்ணா நூற்றாண்டு நூலகம், எல்எல்ஏ கட்டிடங்களில் இலக்கிய கூட்டங்கள் நடத்த கட்டணமின்றி அரங்கம் தர வேண்டும். தமுஎகச, கலை இலக்கிய பெருமன்றம் போன்ற முற்போக்கு அமைப்புகள் செயல்பட சென்னையில் அலுவலகம் வழங்க வேண்டும். குறும்படம், ஆவணப் படங்களை கட்டணமின்றி திரையிட வடபழனி, கோடம் பாக்கம் பகுதியில் பிரிவியூ தியேட்டர் அமைத்து தர வேண்டும். புதுப்பிக்கப்பட்ட விக்டோரியா மகாலில், நூற்றாண்டு கடந்த தமிழ்ச் சினிமாவின் வரலாற்றை தொகுத்து அருங்காட்சி யகம் அமைக்க வேண்டும், நாடக பயிற்சி மற்றும் அரங் கேற்றத்திற்கு கட்டணமின்றி அரங்கு அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டின் புகைப்பட கண்காட்சியை மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.மலர்விழியும், புத்தகக்காட்சியை கவிஞர் ரத்திகாவும் திறந்து வைத்தனர். மாவட்டத் தலைவர் சி.எம்.குமார், துணைத்தலைவர்கள் பாரதி செல்வா, மு.சா.ஆகி யோர் தலைமைக் குழு வாக இருந்து மாநாட்டை வழி நடத்தினர். வரவேற்புக் குழுத் தலைவரும், திரைக் கலைஞருமான தெ. மதன்குமார் வரவேற்றார். மாநிலக்குழு உறுப்பினர் திரைக்கலைஞர் நிறைமதி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநில துணைத் தலைவரும் திரைக்கலை ஞருமான ரோகிணி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் நாடக கலைஞர் வா.அசோக் சிங்கும், கலை இலக்கிய பண்பாட்டு அறிக்கையை துணைச் செயலாளர் எடிட்டர் கா.சரத்குமாரும், வரவு செலவு அறிக்கையை பொருளாளர் கவிஞர் சரத்குமாரும் சமர்ப்பித்தனர். மாநிலப் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா நிறை வுரையாற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் பாமிதா நன்றி கூறினார். நிர்வாகிகள் தேர்வு மாவட்டத் தலைவராக சி.எம்.குமார், செயலாளராக வா.அசோக்சிங், பொரு ளாளராக கா.சரத்குமார் ஆகி யோர் தேர்வு செய்யப் பட்டனர்.