tamilnadu

img

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் பொறுப்பேற்பு!

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதியாக நீதிபதி டி.கிருஷ்ணகுமார் பொறுப்பேற்றுக்கொண்டார்.
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமிக்கப்படும் வரை நீதிபதி கிருஷ்ணகுமார், பொறுப்புத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதை அடுத்து, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதியாக நீதிபதி டி.கிருஷ்ணகுமார் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமை நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.