tamilnadu

img

சென்னையில் வேலைவாய்ப்பு  முகாம்

தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு மற்றும் மால்டஸ் நிறுவனமும் இணைந்து  ஞாயிறன்று (ஜூன் 2) சென்னையில் வேலைவாய்ப்பு  முகாமை நடத்தின. இம்முகாமை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தொடங்கி வைத்தார். மால்டஸ் நிறுவன அதிகாரிகள் புனிதா, சாகாயம், மத்திய அமைப்பின் துணைப்பொதுச் செயலாளர்  தி.ஜெய்சங்கர், மத்திய சென்னை கிளைத் தலைவர் சீனிவாசன், தென்சென்னை கிளை -1ன் செயலாளர் ஏ.முருகானந்தம், ஜிசிசி கிளை தலைவர்  முத்து, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி, இணை ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் பேசினர்.