tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு

விழுப்புரம், ஆக.26- விழுப்புரம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி யிடம் நகை, பணம் பறித்துச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே சாலை அகரம் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி (70). இவர் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அடையாளம், பெயர் தெரியாத நபர் வீட்டுக்கு வந்துள்ளார். தொடர்ந்து தனலட்சுமியிடம் “உங்களுக்கு ரேசன் பொருள் வாங்கித் தருகிறேன்” என்று  நைசாகப் பேசி ரூ.500 பணத்தைப் பெற்றுச் சென்றுள்ளார். மேலும் “உங்களுக்கு லோன் வேண்டுமா” என்று கேட்ட போது “ஆமாம்” என்று தனலட்சுமி கூறியதாக தெரிகிறது. அதனால் அந்த மர்ம நபர் கூறியதைக் கேட்டு புகைப் படம் எடுப்பதற்காக தான் அணிந்திருந்த நகையைக் கழற்றி பீரோவில் வைத்துவிட்டு, மர்ம நபரிடம் புகைப்படம் எடுத்து ள்ளார். இந்நிலையில் அந்த மர்ம நபர் சென்ற நிலையில் அவர் பீரோவில் வைத்த நகைகளைப் பார்த்தபோது அங்கு  நகைகளைக் காணவில்லை.  இதனைக் கண்டு அதிர்ச்சி யடைந்த தனலட்சுமி பின்னர் தான் நூதன முறையில் பணத்தையும், நகையையும் மர்ம நபர் பறித்துச் சென்றது தெரியவந்தது. இது குறித்து தனலட்சுமி அளித்த புகாரின் பேரில் வளவனூர் காவல் நிலையப் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விநாயகர் சிலைகள் வழங்கிய இஸ்லாமியர்கள்

கிருஷ்ணகிரி, ஆக.26- ஒவ்வொரு ஆண்டும் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மிலாடி நபி குழு சார்பில் விநாயகர் சிலை மற்றும் பூசை பொருட்கள் வழங்கி வருவது வழக்கம். அதன்படி, பாப்பாரப்பட்டியில் மிலாடி நபி குழு தலைவர் அஸ்லம் தலைமையில் இஸ்லாமியர்கள் வீடு, வீடாக சென்று விநாயகர் சிலை வழங்கினார். இதுகுறித்து மிலாடி நபி குழு தலைவர் கூறும்போது, “மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி 15 ஆண்டுகளாக விநாயகர் சிலை மற்றும் பூசை பொருட்கள் வழங்கி வருகிறோம். இந்த  ஆண்டு, 100 வீடுகளுக்கு வழங்கி, வாழ்த்துகளை தெரி வித்தோம் என்றார்.

ஸ்ரீதேவி சொத்துக்கு  உரிமை கோரும் மூவர்

 சென்னை, ஆக.26 - மோசடியாக பெற்ற வாரிசு சான்றிதழ் வாயிலாக, மறைந்த  நடிகை ஸ்ரீதேவியின் சொத்துக்கு, மூன்று பேர் உரிமை கோரு வதாக கூறி, அவரது கணவரான போனி கபூர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவி, 1988ல் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சொத்தை, சம்பந்த முதலியார் என்பவரின் குடும்பத்தினரிடமிருந்து வாங்கினார். கடந்த 37  ஆண்டுகளாக சொத்தை அனுபவித்து வரும் நிலையில், சம்பந்த முதலியார் மகன் சந்திரசேகரனின் இரண்டாவது மனைவி, மகன் மற்றும் மகள் என மூன்று பேர், மோசடி யாக வாரிசு சான்றிதழ் பெற்று, சொத்தில் தங்களுக்கு பங்கு  உள்ளது என்று கூறி வருகின்றனர். முதல் மனைவி உயிரோடு இருந்த போது, தன்னை திரு மணம் செய்து கொண்டதாக, சந்திரசேகரின் இரண்டாவது மனைவி கூறியுள்ளார். இதனால், மூவரையும் சட்டப்பூர்வ வாரிசுகளாக கூற முடியாது. எனவே, மூவரும் மோசடி யாக பெற்ற வாரிசு சான்றிதழை ரத்து செய்யக் கோரி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், தாம்பரம் தாசில்தார் ஆகி யோரிடம் அளித்த விண்ணப்பத்தை, பரிசீலிக்க உத்தர விட வேண்டும் என்று வழக்கில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசார ணைக்கு வந்தது. அப்போது, போனி கபூரின் விண்ணப் பத்தின் மீது, நான்கு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, தாம்பரம் தாசில்தாருக்கு உத்தரவிட்டு, மனுவை நீதிபதி முடித்து வைத்தார்.

படம் தயாரிக்கும் நடிகர் ரவி மோகன்

சென்னை, ஆக.26  -சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரைப்பட கலைஞர் ரவி மோகன் புதிதாக தயாரிப்பு நிறு வனத்தை தொடங்கினார். இதில் ரவி மோகனின் அம்மா மகா லட்சுமி, அவரது சகோதரர் ராஜா, நடிகர்கள் சிவராஜ்குமார், சிவகார்த்திகேயன், ரிதேஷ் தேஷ்முக், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, நடிகை ஜெனிலியா உள்பட பலர்  கலந்து கொண்டனர். அப்போது பேசிய ரவி மோகன், “முதல் முறையாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி 2 படங்களை தயாரிக்கிறேன். இதில் ஒரு படத்தில் ஹீரோவாக யோகி பாபு நடிக்கிறார். இந்த படத்தை நான் இயக்குகிறேன்” என்றார்.

அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் பணியிட மாற்றம்:  அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை, ஆக.26- அரசு மருத்துவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி மேட்டூரில் இருந்து சென்னைக்கு பாதயாத்திரை மேற் கொண்டதற்காக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். ஒன்றிய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி, அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் பெருமாள் பிள்ளை, சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து சென்னை நோக்கி, கடந்த ஜூன் 11ஆம் தேதி முதல் 19 வரை பாதயாத்திரை மேற்கொண்டார். இந்நிலையில், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பணியாற்றி வந்த அவரை, நாகப்பட்டி னம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இதே  விவகாரம் தொடர்பாக துறை ரீதியான நடவடிக்கை நிலு வையில் உள்ள நிலையில், தன்னை பணியிடம் மாற்றம் செய்தது தன்னிச்சையானது எனக் கூறி அரசு மருத்து வர்கள் சங்க தலைவர் பெருமாள் பிள்ளை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தனது பணியிட மாற்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவை ரத்து செய்ய  வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கை  விசாரித்த நீதிபதி பி. டி .ஆஷா, மனுவுக்கு பதில் அளிக்கும் படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 29க்கு தேதிக்கு தள்ளி வைத்தார்.