சென்னை,பிப்.26- சென்னை மாநகராட்சி 200 வார்டுகளுக்கான வாக்குச்சாவடி பட்டியல்களை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆணையாளர் பிர காஷ் புதனன்று (பிப்.26) வெளி யிட்டார். சென்னை மாநகராட்சி சாதா ரண உள்ளாட்சித் தேர்தலுக்காக 200 வார்டுகளுக்கான வார்டு வாரி யான வாக்குச்சாவடி பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஆண் வாக்கா ளர்களுக்காக 135 வாக்குச்சாவடி களும், பெண் வாக்காளர்க ளுக்காக 135 வாக்குச்சாவடி களும் மற்றும் அனைத்து வாக்கா ளர்களுக்காக 5,489 வாக்குச் சாவடிகளும் ஆக மொத்தம் 5,759 வாக்குச் சாவடிகள் உரு வாக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆணையாளர் பிர காஷ் இன்று வெளியிட்டார்.வரைவு வாக்குச்சாவடி பட்டியல் இன்று முதல் அனைத்து வார்டு அலுவலகங்களிலும், மண்டல அலுவலகங்களிலும், மாவட்ட தேர்தல் அலுவலர், ஆணையாளர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் அலுவ லர் அலுவலகத்தில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது.