tamilnadu

img

சென்னைப் பள்ளிகளில் அறிமுகமாகும் பிரெஞ்சு பாடம்

சென்னை, ஜூன் 10- சென்னைப் பள்ளிகளை உலகத் தரத்தில் மாற்றும் வகையில் பிரெஞ்சு பாடத்தை அறிமுகப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி யில் கல்வித்துறையின் கீழ் 206 துவக்க பள்ளிகள், 13 நடுநிலை பள்ளிகள், 46 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 417  அரசுப் பள்ளிகள் செயல்படு கிறது.  இந்த பள்ளிகளில் சுமார்  1 லட்சத்து 20 ஆயிரம் மாண வர்கள்  பயில்கின்றனர்.

இந்த  பள்ளிகளுக்கான அனைத்து  அடிப்படை வசதிகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் மாநக ராட்சி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கபடுவது வழக்கம். இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்குதல், மாண வர்களின் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் என தனியார் பள்ளிகளுக்கு நிக ராக மாநகராட்சி பள்ளி களில் அனைத்து வசதிகளும்  செய்யப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஏற்கெனவே 636 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலை யில் தற்போது ரூ.7 கோடி மதிப்பீட்டில் மேலும் 255  கேமராக்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் சிட்டிஸ்  திட்டத்தின் கீழ் மாநக ராட்சி பள்ளிகளில் உள்கட்ட மைப்புகள் மேம்படுத்தப் பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. அதன் தொடர்ச்சி யாக தற்போது மாநகராட்சி பள்ளி மாணவர்களின் திறனை உலக தரத்தில் மேம்படுத்தும் நோக்கத்தில் பிரெஞ்சு மொழி கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.