tamilnadu

img

வேர்ல்டு லேப் கடலூர் பள்ளியில் அறிமுகம்

கடலூர், செப். 7- கவஸ்ட்ரோ (இந்தியா) ஆர்ச் பவுண்டேஷனுடன் இணைந்து 6 புதிய ப்ரைட்டர் வேர்ல்டு லேப்களை கடலூரில்  அறிமுகம் செய்துள்ளது. கடலூர் அருகே உள்ள சுப்பிர மணியபுரம் ஜீவா மெட்ரிக் பள்ளியில் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியாவிலும் மற்றும் உலகம் முழுவதும் மேம்பட்ட  மற்றும் உயர் செயல்திறன் கொண்ட பாலிமர்களின் முன்னணி  தயாரிப்பாளரான கவஸ்ட்ரோ ஆர்ச் பவுண்டேஷனுடன் இணைந்து கடலூரில் மாணவர்களுக்காக 6 புதிய ப்ரைட்டர் வேர்ல்டு லேப்களை அறிமுகம் செய்துள்ளது. ப்ராஜெக்ட் பிரைட்டர் வேர்ல்ட் லேப்ஸ் குழந்தைகளிடையே அறிவியல் பகுத்தறிவை மேம்படுத்துவதையும், புதிய தலைமுறை பகுப்பாய்வு சிந்தனையாளர்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. துவக்க நிகழ்வில் பேசிய கவஸ்ட்ரோ நிர்வாக இயக்குனர்  அஜய் துரானி கவஸ்ட்ரோவில்,“ கல்வி என்பது அடிப்படை  உரிமை என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம், அது  அனைவருக்கும் கிடைக்க வேண்டும். குழந்தைகளிடம் விஞ்ஞான ஆர்வத்தை ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் கண்டுபிடிப்பு மூலம் கற்றுக் கொள்ளவும், பாடப் புத்த கத்தின் அறிவியல் அறிவை உண்மையான உலகத்துடன் இணைக்கவும் முடியும் என்பது எங்கள் ப்ரைட்டர் வேர்ல்ட் லேப்பின் நோக்கமாக உள்ளது” என்றார். இதுபோன்ற பல துவக்கங்களை நாங்கள் எதிர்நோக்கு கிறோம். என ஆர்ச் டெவலப்மென்ட் பவுண்டேஷனின் தலைமை நிர்வாக அதிகாரி சோன்கீ ஷா கூறினார். கிரேட்டர் நொய்டா, அங்கலேஷ்வர், மும்பை மற்றும் கடலூர் ஆகிய நான்கு நகரங்களில் 10 கணித மற்றும் அறி வியல் ஆய்வகங்களை நிறுவி உள்ளோம். 2018 ஆம் ஆண்டில், ஆர்ச் பவுண்டேஷனுடன் ஒத்துழைப்பு அமைத்த  பின்னர் கூடுதலாக 20 பிரைட்டர் வேர்ல்ட் லேப்களுடன் இந்த  திட்டம் மிகவும் வலிமையானதாகிறது.  2019 ஆம் ஆண்டுடன், பிரைட்டர் வேர்ல்ட் லேப்  திட்டத்திற்கான விரிவாக்கம் மற்றும் வளர்ச்சித்  திட்டம் மிகவும் விரிவானதாக மாறியுள்ளதுடன், கிரேட்டர் நொய்டா, அங்கலேஷ்வர், மும்பை மற்றும் கடலூரில்  மேலும் 20 பிரைட்டர் லேப்கள் சேர்க்கப்பட்டுள்ளன.