சென்னை, ஆக. 22 - தமிழக வெற்றிக் கழகத் தின் கொடி அறி முகம் மற்றும் கொடி பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் வியாழ னன்று (ஆக.22) நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் வர வேற்றார். பின்னர் கட்சித் தலைவர் விஜய் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறத்தில் இரு போர் யானைகள் மற்றும் வாகை மலர், நட்சத்தி ரங்கள் இடம் பெற்றிருக்கும் கட்சிக் கொடியை விஜய் அறிமுகம் செய்தார்.